மேகத்தின் நன்னீரால் குளிர்விக்கப்பட்ட பூமி,
தண்ணீர் தேடும் மக்களின் கண்ணீரால்,
நிரம்பி விடப் போகிறது.!!
மழையில்லா தேசமாய் மாறிப் போனது,
இயற்கையை மதிக்காத மக்களினாலா?
மக்களை மதிக்காத அரசியலினாலா?
நம்முள் வினா எழும்புவதில் வியப்பேதுமில்லை.
வினாவிற்கான விடையும் நமக்குள்ளே தான்.!!
ஆறறிவு கொண்ட உயிர்களின் தாகம் தீர்க்க,
தானுண்ட நீரைத் தலையாலே கொடுக்கும்,
ஓரறிவு உயிர்களான மரமே தீர்வு.
மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்.
இயற்கையை, செயற்கையால் வெல்ல முடியாது,
இப்போது மட்டுமல்ல, எப்போதுமே!.