சிரிக்கத் தெரியாத உதடுகள்,
அழுகைத் தெரியாத கண்கள்,
மறக்கத் தெரியாத உள்ளம்,
கடக்க முடியாத பாதை,
நடக்க முடியாத பயணம்,
"என் வாழ்க்கை"!!!
கிழக்கே இல்லாத சூரியன் போல
உதிப்பது எங்கே?
உதயமாவது எங்கே என்று
தொடக்கமும் முடிவும் இல்லாமல்
எங்கோ சுற்றிக் கொண்டிருக்கின்றது...!
காதலே, எங்கேனும் கண்டால்,
என் முகவரியை கொடுத்துவிடு இல்லையேல்,
என் முடிவுரையை நீயே எழுதிவிடு.
இப்படிக்கு - காத்திருக்கும் கல்லறை நான்..!