Here are 30 Facts about texting that will surprise you

1. தரையோடு தரையாக நசுக்கப்பட்டாலும் சத்தியம் மறுபடியும் எழுந்து நின்றுவிடும். ஆண்டவனுடைய முடிவில்லாத நாட்கள் அதற்கும் உண்டு. – பிரையண்ட்


2. எதைக் கண்டு ஒரு மனிதனுக்கு சிரிப்பு வருகிறதென்று கவனி. அவன் எப்படிப்பட்டவனென்று மிக நன்றாகத் தெரிந்து கொண்டு விடலாம். – கெதே


3. அறிவு என்பது நம்முடைய ஒரு பகுதியாக இருக்கிறது. ஆனால், இதயம் நம்முடைய ஒவ்வொரு பகுதியாக இருக்கிறது. – ரிரேஸ்


4. சட்டம் ஒரு சிலந்திக்கூடு. வண்டுகள் அதை அறுத்துக்கொண்டு அப்பால் போகின்றன. ஆனால், பூச்சிகள் அதில் சிக்கிக் கொள்கின்றன.- செக்கோஸ்லோவேகியா


5. செய்யத் தெரிந்தவன் சாதிக்கிறான். செய்யத் தெரியாதவன் போதிக்கிறான். – கர்னல் கீல்

உடல் பொய்

உயிரும் பொய்

உறவும் பொய்

நட்பு நம்பகமான பொய்

காதல் காம பொய்

பிரிவும் பொய்

கல்யாணம் தவிர்க்க இயலாத பொய்

பிள்ளைகளும் பொய்

படிப்பும் பொய்

பட்டமும் பொய்

வேலை பொய்

சக வேலைக்காரன் பொய்

மேலிடம் பொய்

கீழிடம் பொய்

கலை தேவையான பொய்

கதைகளும் பொய்

ஆளும் அரசு பெரிய பொய்

அரசியல் மட்டமான பொய்

பத்திரிக்கை பொய்யின் பொய்

கனவுகள் நம்பிக்கை பொய்

கற்பனைகள் சந்தோசப் பொய்

சேமிப்பு பெரும்பொய்

இழப்பு பொய்

இறப்பு பொய்

எழுதும் நான் பொய்

படிக்கும் நீனும் பொய்

படைத்தவன் பொய்

பிரபஞ்சம் பொய்

காலம் பொய் – இந்தக்

கவிதையும் பொய்


உஸ்…அப்பா

முடியல..

இப்பவே கண்ணக்கட்டுதே..


பின் எது தான் மெய் ?

நல்ல பொய்கள்

அனைத்தும் அல்லது

நம்பக்கூடிய பொய்கள்

அனைத்தும்

எனக்கு உதவிய இருபத்தைந்து பேர்களில்…

என்று பில் கேட்ஸ் விவரிக்கும் புத்தகத்தில்

முதல் இருபத்திமூன்றும் நம்மூர்

ரங்கராஜன்களும் ஸ்ரீனிவாசன்களும் தான்.


இரு கரம் நீட்டி ஆங்கிலேயர்களும்

அமெரிக்கர்களும் அழைத்தது, அழைப்பது

நம்மை இறுக்கி அணைப்பதற்காக அல்ல

அணைத்து இறுக்குவதற்காக…


கருத்து சுதந்திரம் கறுத்துப் போன

அன்னமாய் இங்கே!

பூஜ்ஜியம் கண்டுபிடித்தது காலம் சென்ற இந்தியன்

பூஜ்ஜியமும் ஒன்றும் என்று கணினி தயாரித்தவன்

உலகமயமாக்கல் கோட்பாடோடு

உலவிவரும் அமெரிக்கன்!


சிலர் கருப்பு மை சேர்த்து சிவப்பாய் எழுதுவார்கள்;

சினம்கொண்ட சிங்கம் ஒன்று சிவப்பு மை கொண்டு

கருப்பை எழுதியது…கருப்பாய் எழுதியது.

என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்றெழுதியது