கொஞ்சம் கூட ஈரமில்லை
அவள் மனதில்
…………. என் கண்களில் மட்டும்
உன் கண்ணீர் சுட்டதால் என்னவோ!
பூப்பெய்த மறுக்கின்றன – என்
கல்லறைப் பூங்காக்கள்.
மேகமூட்டம் போல்
அவள் நினைவுகள் என்னில்………..!!!
எப்போது வேண்டுமானலும்
மழை வரலாம் என் கண்ணில்……….!!!
தண்ணீரில் தான்
மீன்கள் துள்ளி விளையாடும்……!
- ஆனால்
முதல் முறையாக கண்ணீரில் துள்ளி
விளையாடுவதை காண்கிறேன்….
அவள் அழுத போது……..!!!!!!
என் கண்களில்
அருவி பாய்ந்தது
நீ உன் காதலை
அவளிடம் தெளித்த போது.
இரவு
பகலை விழுங்கியது
காதலை நிராகரித்த
உன் கடிதம்
என் சந்தோசத்தை
விழுங்கியது போல்.
நெஞ்சில்
சுரீரென்று வலித்தது
உன் காதல் அம்பு
என் நண்பியைத்
துளைத்த போது.
கஷ்டமான காலங்களில்
மனம் சிக்கித்தவிக்கும் வேளைகளில்
நான் கண்ணீர சிந்தும் நேரங்களில்
உன் புன்னகையை
பார்த்தாலே பரவசம்.
உனக்காய்
காத்திருக்கிறேன் ..
நீ
வருவாயென
விழி வாசலில்
கண்ணீர்
கோலத்தோடு ..
குடை கிழியவில்லை..
உன் நினைவுகளால் கிழிந்த
இதயத்தின் வலிகளால்
நனைந்துவிட்டேன் கண்ணீரில்…..
பூவிதழினும்
மென்மையானது….
எனக்காக
நீ சிந்திய கண்ணீர்த்துளிகள்…….
நான் தவமிருந்தது உண்மைதான்
உன் வரம் கிடைக்குமென!
சாபம் கொடுத்துவிட்டாயே
கடைசிவரை கண்ணீரென!
நான் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும்
ஓராயிரம் அர்த்தங்கள் உண்டு.. !!!
அதில் ஒன்றாவது உனக்கு புரிந்திருந்தால்
உன் இதழ் இம்மொழி பேசி இருக்காது …!!!
ஒவ்வொன்றாக நீ சிந்திய கண்ணீர்,
இரண்டிரண்டாக வந்து வீழ்ந்தன,
நீ எனக்காகாவும் சேர்த்து அழுததால்..!
நீ சிந்தும் எல்லா கண்ணீரை விட,
எனக்குப் பிடித்தமானது,
நீண்ட இடைவெளிக்குப் பிறகு,
என்னை சந்திக்கும்போது,
நீ வடிக்கும் ஆனந்தக் கண்ணீர்தான்!!.
ஆறுதலே கூற முடியாத சில கஷ்டங்களுக்கு
நிச்சயமாக அழுகை ஒரு மருந்தாக இருக்கும்.
தன் கண்களிலிருந்து வரும் கண்ணீரை
மறைத்து புன்னகை சிந்துபவர்களின் மனதினில்
இருப்பது ஒன்று மட்டும்தான்..!
நம் கண்ணீரைக் கண்டு வேறுயாரும் கண்ணீர் சிந்தி விடக்கூடாது
என்ற எண்ணம் மட்டும் தான்..!
நம்ம மனசுக்கு பிடிச்சவங்க
நம்மை கஷ்ட படுத்தும்போது
அவங்க மேல நமக்கு கோபம் வற்றாது
கண்களில் கண்ணீர் தான் வரும் ...
கண்கள் வாங்கிய வலிகளை
இதயம் சுமப்பதுதான் காதல்....
இதயம் சுமக்கும் வலிகளை
கண்கள் வெளியிடும் உணர்வுதான்
கண்ணீர்....
நீ தந்த நினைவுகளுக்கும்
நீ வந்த பாதைகளுக்கும்
நீ சொன்ன வார்த்தைகளுக்கும்
நீ இருந்த நிமிடங்களுக்கும்
நீ தந்த காயங்களுக்கும்
இன்று என் கண்கள் பதில் சொல்கின்றது .....
கண்ணீரில் ..
நீ பேசிய வார்த்தையால் என் உணர்வுகள் என் வார்த்தைகள் செத்துவிட்டன வர்ணிக்கத்தெரியவில்லை அந்த வலியை அழுகின்றன விழிகள் என் இதயத்தை எட்டிப்பார் இரத்தத்தை கடத்துவத்தற்காக கண்ணீரை கடத்துகிறது !!
ஆண்களின் சிரிப்பை விட
பெண்களின் புன்னகை அழகானது
ஆனால் பெண்களின் கண்ணீரை விட
ஆண்களின் ஒரு துளி
கண்ணீர் வலி சிறந்தது.
நேசிப்பது எல்லாம் கிடைத்து விட்டால்
…
கண்ணீர் துளிகளுக்கு மதிப்பில்லை …
கிடைப்பதை எல்லாம்
நேசித்து விட்டால்
கண்ணீருக்கு வேலை இல்லை ..