கன்னல் இதழழகு, கயலோடும் விழியழகு,
பின்னங் கால்தொட்ட கூந்தலழகு - பொன்போன்று
மின்னுகின்ற உடலழகு, நீ எத்தனை பேரழகு,
அன்பே, நீ அன்பை அள்ளித்தருவாயா..!
ஒரு நொடிப் பார்வையே
ஓராயிரம் கவிதைகள் நீயெனில்
பார்வையே கவியாய் தோன்றினாலும்
கோர்வையே கருநயமாய் மாற்றினாலும்
என்மனதில் விரிக்கும் பூவிதை
மதிப்பில்லா காகிதமானாலும்
துடிப்பு இல்லா இதயமானாலும்
என்னில் தோன்றிய ஓவியமே நீ..!
எத்தனை நாள் முயற்சியோ,
பார்த்து பார்த்து செதுக்கிய சிற்பமோ..!
ஊரெல்லாம் பார்த்து வியந்த அழகு.
தவமின்றி வரம் வேண்டி நின்ற வரிசையில்,
நானும் என் மனக்கதவைத் திறந்து காத்திருக்க,
சுயவரமின்றி உள்ளே நுழைந்த அவள்,
எனக்கு மட்டும் வரம் தரும் தேவதையாய்.
அம்மா:-
வெளிவர துடித்து
அவளுக்கு வலி கொடுத்தேன்!
வெளிவந்தபோது - மீண்டும்
உள்ளே செல்ல மனம் ஏங்கியதால்
அழுதேன் முதன்முறையாக!
அழுதபோது - அவளின்
அரவணைப்புஉணர்த்தியது,
கருவறையில் சுமந்ததுபோதாதென,
உயிருள்ளவரை மனதில் சுமப்பாளென!!.
முதன் முதலாய் உன்னை நான் கண்ட பின்னே,
என் கனவு தேவதையாய் ஆனாய் கண்ணே!
ஆசையின் ஓசை தன்னை கேட்க வேணுமுன்னே,
திரிகின்றேன் போகுமிடம் எல்லாம் உந்தன் பின்னே!
கருணைக்கொண்டு பார்க்க வேணும் நீயும் என்னே,
வந்துநிற்க தயங்குகிறேன் உந்தன் முன்னே!
நீதான் எனக்கானவள் என முடிவு தெரியும் முன்னே,
ஒரு காதல்மாளிகை கட்டிவிட்டேன் எனக்குள்ளே ..!
செக்க சிவந்த அவள் முகம், செந்தாமரைப்போல் இருக்க,
துள்ளும் அவள் கரு விழிகள், தாமரையின் நடுவே,
தேன் உண்ணும் கருவண்டு போல இருக்க,
அந்த நொடியில் கண்டேன் காதலை..!
எதை தேடுது என் கண்கள் உன்னிடத்தில்,
நீ மறைக்காது நின்ற போதும் என்னிடத்தில்,
ஒவ்வொரு முறையும் என் தேடல் தோற்று விடும்,
சில மணித் துளிகளில் அசந்துப் போய்,
கண்ணயர்ந்துப் போகும் உன் பேரழகில்.
என் கனவுலகு கன்னி:-
கனவு நெனவாகலாம்,
இல்லை வெறும் நினைவாய் மனதில் நின்றிடலாம்.
கனவில் வந்த காதலியே,
நீ என்ன, என் கனவின் நினைவா,
இல்லை நெனவாகி என் எதிரே தோன்றி,
நெனவாக்குவாயா என் கனவை..!
தோலில் சுருக்கங்கள் விழுந்தாலும்,
உள்ளங்கள் சுருங்காமல்,
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழும்,
நம் அம்மா அப்பாவின் வாழ்க்கையில்,
ஓர் அழகிய காதல் வாழ்ந்துக்கொண்டிருக்கிறது.
வெட்டவெளியில் உலாவுகின்ற தென்றலைப் போல,
என் நெஞ்சமதனை வருடுகின்ற பூங்காற்றானவளே...!
நாளங்களில் ஓடுகின்ற குருதியைப் போல,
என் இதயமதில் ஓடுகின்ற உயிரானவளே...!
நெஞ்சாங்கூட்டுக்குள் நிற்கின்ற இசையே,
என் எண்ணமெல்லாம் வண்ணமெல்லாம் நீயே...!!
தித்திக்கும், உன் நினைவுகளை
சந்திக்கும் போதுதான்
காத்திருக்கும் வலிகள் கூட
காணாமல் போய் விடுகின்றது என் கனவுகள்.
நீயாக இருக்கும் வரை,
என் கவிதைகள்
உன் பெயர் சொல்லும்
அது விதியின் செயல் அல்ல
நீ செய்த மாய வலை...!
(யாவும் கற்பனை)
என்னவளே இரவினில் மலரும் பூக்களும் உண்டு,
பகலில் மலரும் பூக்களும் உண்டு,
நீ மட்டும் எப்படி எப்போதும் மலர்கிறாய்..!
மலரே உன் பெயர்தான் என்னவோ!!
மலரும் உன் புன்னகையை கண்டாலே,
பல மலரின் மனம் தென்றலில்..!
நித்திரையில் என் சுவாசமும்,
உன் புன்னகையின் வாசம் தானடி..!
தொலைவாய் என தோன்றவில்லை...!!
தேடுதலில் என் எண்ணமில்லை...!!
விலகியும், நீடிக்கிறாய் என்னருகில்...!!
(பிரியாத - வரமாக)
அன்றும், இன்றும், என்றும் அன்புக்கு அடிமையாய்...!!
காதல் பரிசு:-
கவலையோ என்னோடு, கதவருகே நான்..!
உள்ளே கதறலோ உன்னோடு..!
சிறிது நேரத்தில் எல்லாம் மறைந்து,
ஆனந்த கண்ணீர் பெருகியது,
காதலின் வரமாய், கைகளில் அழகிய குழந்தை.
என்னையும் மீறி, உன்னை திரும்பி பார்க்க வைக்கிறது,
என்னை கண்டுக்கொள்ளாமல் போகும் உன் பார்வை..!
தீட்டிய கத்தியைவிட,
தீண்டும் உன் பார்வை,
கூர்மையாகவே தாக்குகின்றது...!!!
மதி வந்து மனதில் நிறைந்ததே,
நதி சென்று கடலில் கலந்ததே,
பூங்காற்று வீசும் போதெல்லாம்,
நெஞ்சைத் தழுவும் உன் பூமேனி,
நீலக் கடலாய் நீழும் நிலமாய்,
அகன்று விரியும் உந்தன் ஞாபகங்கள்,
உன் விழிகள் சொல்லும் ஆயிரம் மொழிகளில்,
என்னை உன்னில் தொலைத்தேனடி..!
கல்லூரி:-
அகதிகளாய் திரிந்தோம்
அடைக்கலம் தந்தாய்.
அனாதைகளாய் இருந்தோம்
அன்பு தந்தாய்.
சிறகுகள் முளைத்து
பறந்து சென்றோம்.
இறையை தேடிய பின்
திரும்பினோம் சிறையைநாடி..!
அனுமதி இல்லாமல் கண்ணில் விழுந்தாய்,
அனுமதி தந்தேன் இதயத்தில் நுழைந்தாய்,
தற்போதோ விழுதுவிட்டு கிடக்கிறாய்,
ஆலமரமாய் அல்ல, எனை ஆளும் அரசியாக..!
Unnai Parka Adampidikum
En Vizhikaluku, Eppadi Puriya Vaipen
Ne En Idayathil Irukirayi Endru.
Unaku Nesika Katru Kodutha Ennai
Ne Thudika Vaithathal Than
Ne Nesikum Pen Unnai Thudika Vaikiral...
Ippadiku Un Idhayam..!