உள்ளத்தில் வலிமையும், நெஞ்சில் துணிவும் இருந்தால்,
எரிமலையும், பனிமலையாக தெரியும்.
வருத்தத்தின் வடிவமும், வசந்தத்தின் உருவமாக தெரியும்,
புயற்காற்றும் இயற்கையின் புன்னகையாக தெரியும்.
எதிர்நீச்சலிட பழகி விட்டால்,
எதிர்த்துப் போராடும் எண்ணம் மேலோங்கும்,
அநீதிகளை அழித்து, நீதியை நிலைநாட்டி,
வெற்றியும் பெறலாம்...!