Best Love Messages and Texts for Him and Her

இன்னமும் பாராமுகம் ஏனடி பெண்ணே,

என் முகம் நித்தம், நித்தம்,

உன் முகம் பார்த்து, அதில் மயங்கி,

உள்ளத்தில் உன்னை மட்டுமே வைத்து,

காதல் தெய்வமாய் பூஜிக்க,

ஒருமுறை என்னைப்பார்த்து என் பார்வையை,

ஏற்றுக்கொள்ளடி உன் பக்தன் என்னை வாழவைக்க,

உன்முகம் என்னைப்பார்த்து உன் பார்வை என்மீது,

பட்டுவிட்டால் பெண்ணே, நம் காதல் கதவு திறந்துகொள்ளும்!.


..காதல்:-🌹


இளமையின் கவிதை.

இனம் புரியாத உணர்வு.

மானுடத்தின் உரிமை.!!


காதல் எப்போதும் வரும் தெரியாது.

காதல் எதனால் வந்தது அதுவும் தெரியாது.

காதல் எல்லோருக்கும் வருவதில்லை.

காதல் சிலருக்கு வந்தே தீரும்.!!


பரபரப்புக்கு பஞ்சம் இல்லை.

பஞ்சனையில் படுத்தால் தூக்கம் இல்லை.

இன்பமான வேதனை.!!


காதலுக்கு சாதி என்ற சாக்கடை இல்லை.

மதம் என்ற பேதம் இல்லை.

ஏற்ற தாழ்வுக்கு இடமே இல்லை.

உள்ளத்தை பார்த்து வருவதே உண்மையான காதல்.!!


மனம் வலிக்கும்.

சோதனை பல வரும்.

உள்ள உறுதியோடு,

போராடி வெற்றி பெறுவதே - காதலுக்கு மரியாதை.!!

உண்மையான காதல் நிச்சயம் ஜெயிக்கும், நிலைக்கும்.!!