சில சமயங்களில்,
நான் சொல்வதை நீ கேற்பதும்,
நீ சொல்வதை நான் கேற்பதும்,
அன்பியலில் அழகான புரிதல்...!
புரிந்தால் பிரிவேது.
ஆர்ப்பாட்டங்கள் இல்லாத உன் அன்பிற்கு அடிமையானேன் நான்,
கடவுளிடம் வேண்டுதலென்று எதுவுமில்லை,
வரமாக நீ கிடைத்ததற்கு, நன்றி சொல்வதை தவிர..!
காதல் ஆசை:-
சின்ன சின்னதாய் சேமித்து வைத்திருக்கிறேன்!!!
என் ஆசைகளை...!
சீக்கிரமாய் வந்துவிடு என் அன்பே!!
இருவரும் சேர்ந்து செலவழிப்போம்.
நீ வானவில்லாய் இரு,
நான் அதில் இருக்கும் ஏழு நிறமாய் இருப்பேன்..!
என்றும் இணைப்பிரியாமல்...!
காதல்:-
நேசிக்கபடுவதும், வெறுக்கபடுவதும்
அவரவரின் அனுபவத்தை பொறுத்தே...!
கதவை திறக்க மோதும் காற்றாய் உன் வாசனை
தீண்ட கொள்ளை போகுது என் மனம்..!
உன்னை நேரில் பார்க்கும்போது,
உன் கண்கள் பேசும் மொழிதனை பார்க்கவே,
என் கண்கள் தவம் கிடைக்கின்றது கள்வனே..!
புரிந்துக்கொள்ளும் வரை
எதையும் ரசிக்கவில்லை
புரிந்துக்கொண்டபின்
உன்னை தவிர எதையும்
ரசிக்கமுடியவில்லை..!
முகம் தெரியாத உன்னை காதலிக்கிறேன்,
நீ என் முகவரியாய் வருவாய் என,
உன்னை தேடி தேய்கிறேன் ஒரு நிலவை போல..!
என் விழியில் விழுந்தவனே,
உன்னை துளியும் மறந்தால்,
என் துடிப்பும் நின்று விடும்!!
உன்னுடன் கழியும் சில மணித்துளிகள்,
வானில் பறக்கிறேன் சிறகில்லாமல்!!
யாருக்காகவும் என் வாழ்க்கையில்லையென்ற எண்ணத்தை மாற்றி,
உனக்காகவே என் வாழ்க்கையென்று காத்திருக்க வைத்துவிட்டாய்...!
உன்னை தேடி வருவேன்,
காதலை அள்ளி தருவேன்,
ஏற்றுக்கொண்டால் விண்ணில் பறப்பேன்,
இல்லையென்றால் தள்ளி நிற்பேன்,
ஒருபோதும் பின்வாங்கமாட்டேன், அழகியே!.
காதலின் சுவாரஸ்யமே...!
அது சொல்லாமல் இருக்கும்வரை தான்.🌹
உன்னிடம் பேசுவதற்கு அதிகமான வார்த்தைகளை சேகரித்து வைத்திருந்தேன்.
உன் கருவிழி கண்டதும் பேச முடியமால் தயங்கி நிற்கிறேன்!.
ஒரு இன்பமான துன்பம் - ❣ஒருதலைக்காதல்❣
மலர்களில்லாத போதும்,
ரசிக்க தூண்டுது கிளைகளை,
மனதில் நறுமணமமாய் நீயிருப்பதால்!
அன்பெனும் மெல்லிய கயிற்றில்,
கட்டிப்போட்டாய் யாரும் அவிழ்த்திட,
முடியாத முடிச்சாய்.
வில்லிலிருந்து பாய்ந்துவந்த அம்புபோல்,
உன் பார்வை என்னுளத்தில் வந்து தைத்தது,
தைத்து மாயமாய் அன்புமலராய் மாறியது.
மன்மதன் ஆரமாய் உள்ளத்தில் காதல் தீ வளர்த்து,
உந்தன் இந்த பார்வைக்கு நன்றி சொல்வேனடி.
என் அன்பே, பேரன்பே நன்றி, நன்றி.
உன்னை முதல் முறை பார்த்தபொழுது,
உள்ளத்தில் வைத்துக் கொள்ளலாம் என்று தான் நினைத்தேன்,
பழகிய பின்பு தான் தெரிந்தது, என் உயிரே நீதானடி என்று,
அதனால் தான் தயக்கமின்றி உயிரில் வைத்துவிட்டேன்!
விட்டுச் செல்லாதே உயிரே,
போவது நீ மட்டுமல்ல என் உயிரும் தான்..!
ஆழ்ந்த உன் மௌனத்தில் பெண்ணே,
நான் பசிபிக் ஆழ்கடலின் அமைதி காண்கின்றேன்.
உன்னிடம், என்னை நீ காதலிக்க சம்மதமா என்று கேட்டேன் நான் நேற்று,
இதோ இன்று எனக்கு அதற்கு பதிலும் கிடைத்துவிட்டது உன் மௌனத்தில்,
உன் முகத்தில் பொதிந்த புன் சிரிப்பில்..!
தேன் பருக மலரை சுற்றி வரும்,
வண்ணத்துப் பூச்சி போல,
உன் காதல் தேடி,
உன்னையே வட்டமிடும்,
காதல் பூச்சி நான்.
சகியாய் தெரிந்த நீ!
சகலமுமாய் மாறினாய்.
என் பார்வையில் மாற்றமில்லை,
என் மனதினில் மாற்றம்!
மாற்றம் ஏமாற்றமாய் மாறாமல்,
எனக்கு ஏதுவாய் அமையுமா?
ஆர்வம் மிக்க குழந்தையாய் கண்ட இடத்தில்,
எல்லாம் கிறுக்க சொல்கிறதே மனம்,
அவன் பெயரை கைவிரல் தேய,
கண்டவர்கள் சொன்னார்கள் எனக்கு கிறுக்காம்,
ஆம் ஒத்துக் கொண்டேன், நான் காதல் கிறுக்கி.!