Quotes About Life That Will Inspire and Motivate You

வாழ்கை என்னஅவ்வளவு கடினமானதா.?

மோதித்தான் பார்க்கலாமே..!

கோழையாய் நடுங்கி சாவதை விட

வீரனாய் வாழ்ந்திட வழிதனை செய்வோம் வா!

உன் வளர்ச்சி கண்டு புறம் பேசி திரியும்,

கயவர்களின் கள்ளப்பேச்சினில் கவனத்தை சிதறவிடாதே!

அர்த்தமில்லா பயத்தில் அலறும் ஓநாய்களின்,

ஊளை சப்தங்களவை விடிந்ததும் காணாமல் போய்விடும்!

இரக்கமில்லா மனிதரிடையே கொட்டிவிடாதே உன் வேதனைகளை,

வேடிக்கை என்றபெயரில் வார்த்தை வேல்தனை எய்திடுவார்!

கருணையின் பெருமையினை உணராதவர்கள்,

அன்பின் ஆழத்தை அறியாதவர்கள்,

உன்னால் அறிந்துவிட்டுப் போகட்டுமே!

வாழ்க்கைப் போராட்டத்தில் அன்பினை கவசமாக்கு!

கோபத்தினை குறுவாளாக்கு!

பொறுமைதனை கேடயமாக்கு!

தன்னம்பிக்கைதனை உந்தன் போர்வாளாக்கு!

வாழ்க்கை உன் வசப்படும்!!.