எவ்வளவு தூரம் போனாலும்
இன்னும் கொஞ்சம் தூரம் இருக்கு
என்ற ஆர்வத்தை கொடுப்பது தான்
வாழ்க்கையின் அழகியல்..!!!
வெற்றிபெறும் நேரத்தைவிட,
நாம் மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும்
வாழும் நேரமே, நாம் பெறும் பெரிய வெற்றி.!!!
ரசிப்பதற்கு ஏதேனுமொரு விஷயம்
தினமும் கிடைத்துக் கொண்டிருக்கும் வரை,
வாழ்க்கை அழகானது...!
இல்லாததை நினைத்து ஏங்காமல்,
இருப்பதைவைத்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும்!.
நல்ல விதை விதைத்தால்
தான் செடி நன்றாக வளர்ந்து
நல்ல பலனை கொடுக்கும்...!
அது போல
நல்ல எண்ணங்கள் இருந்தால் தான்
வாழ்க்கை பிரகாசிக்கும்...!
வாழ்க்கையைப் பற்றி யோசிப்பவன் காதலிப்பதில்லை,
காதலிப்பவன் வாழ்க்கையை பற்றி யோசிப்பதில்லை,
இதை புரிந்தவன் இரண்டிலும் தோற்பதில்லை...!
சகித்துக்கொண்டு வாழ்வதல்ல வாழ்க்கை,
சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை..!
நாம் அழிவதை பலர் வரவேற்றாலும்,
நம் முன்னேற்றத்தை விரும்பும்,
சில உண்மையான நல் உள்ளங்களை,
வாழ்வில் சம்பாதித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
வாழ்க்கையை பாரமென்று நினைத்தால்,
நம் சந்தோஷங்களும் தூரம் தான்...!
எந்திர வாழ்க்கையை,
வாழ கற்றுக் கொண்ட நமக்கு,
நம்மை பற்றி யோசிக்க நேரமில்லை...!
வாழ்க்கை ஒரு அனுபவமுங்க,
நல்ல அனுபவம் கிடைச்சா பரவசப்படணும்!!.
மோசமான அனுபவம் கிடைச்சா பக்குவப்படணும்!!.
அனுபவிங்க வாழ்க்கையை!!.
எதிர் பார்ப்பதை விட, எதிர் கொள்வதைக் கற்றுக் கொள்ளுங்கள்,
இங்கு எதிர்பார்க்கும் வாழ்க்கை கிடைப்பது இல்லை..!
எதிர் கொள்ளும் வாழ்க்கையே கிடைக்கிறது.
உதிக்கும் போதும், மறையும் போதும்
ரசிக்கும் உலகம், உச்சிக்கு வந்தால்
திட்டி தீர்க்கும் சூரியனை மட்டுமல்ல,
மனிதனின் வளர்ச்சியும் கூட!!
இது தான் வாழ்க்கை.
எல்லா எதிர்பார்ப்புகளிலும் ஏமாற்றம் என்ற பரிசும்,
எல்லா ஏமாற்றத்திற்கு பிறகும் பக்குவம் என்ற பரிசும்,
கிடைப்பதற்கு பெயர் தான் வாழ்க்கை!!.
வாழ்க்கையில் சின்ன சின்ன சந்தோசங்களை இழந்தவர்களுக்கு தான் தெரியும், அன்பு எவ்வளவு பெரிய பொக்கிஷம் என்று.!!
வலிக்காத வாழ்வு, பலிக்காத கனவில் மட்டுமே தோன்றும்.!!
வழியில் சில வலிகள் இருக்கட்டும்,
விழியில் கொஞ்சம் ஈரம் இருக்கட்டும்,
அப்போது தான் சலிக்காத சந்தோஷங்கள் கிட்டும்.
பிறர் கருத்துகளை வாழ்வாக கொள்வதை விட,
பிறருக்கு கருத்து தெரிவிக்க வாழ்வை மேம்படுத்துவது சிறப்பு..!
தானாக உயரும் வயது,
விடாமல் துரத்தும் காலம்,
தடுக்க முடியாத நேரம்,
கடக்கத் துடிக்கும் இளமை,
காலைத் தடுக்கும் சமூகம்,
தொட வேண்டிய இலக்கு,
இத்தனை போராட்டம் தான் வாழ்க்கை!!.
நாணயத்தின் இரு பக்கங்கள், போன்றது வாழ்க்கை.
மென்மையாகப் பேசும்போது இனிமையாகவும்,
வன்மையாகப் பேசும்போது கசப்பாகவும் இருக்கும்.
புரிந்து கொண்டால் வாழ்க்கை உன்கையில்,
வளமே உன் வாழ்க்கையில்..!
வண்ணங்களில் இல்லை வாழ்க்கை,
உன் எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை.!
குறிக்கோள் இல்லாத வாழ்க்கை,
வெறும் குப்பை மேடு தான்.!
வாழ்க்கை ஒரு விசித்திரமான பரீட்சை,
அடுத்தவரை பார்த்து காப்பி அடிப்பதால் தான்,
பலர் தோல்வி அடைகிறார்கள்!!
காரணம், ஒவ்வொருவருக்கும் தனித்தனி கேள்வித் தாள்கள்.
நம் கையில் உள்ள விரல்கள் ஐந்தும் ஒரே நிலையில் இல்லை,
அதே விரல்களை மடக்கி வைத்தால் ஒரே நிலைபாட்டில் இருக்கும்.
அதுபோலவே வாழ்க்கையையும் வளைந்து கொடுத்து,
வாழ்ந்து பார், இன்பம் மட்டுமே வந்து சேரும்..!