மே முதல்நாள் மேதினியில் திருநாள்,
உழைக்கும் வர்க்கத்தின் பெருநாள்!
நாளும் உழைத்திடும் தொழிலாளி,
நாட்டை முன்னேற்றும் பாட்டாளி!
உழைக்கும் வர்க்கத்தை போற்றிடுவோம்
உழைக்கும் கரங்களை காத்திடுவோம் !
இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!.
உழைப்பாளி இன்றி உலகம் இல்லை !
உழைப்பாளி இன்றி உயர்வு இல்லை !
உழைப்பாளி இன்றி வாழ்க்கை இல்லை !
உழைப்பாளி இன்றி வசந்தம் இல்லை !
வியர்வை காயும் முன் கூலியைக் கொடு !
வேதனை வராமல் உழைப்பாளியை காத்திடு !
அனைவருக்கும் இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்!.