மார்போடு சேர்த்தணைத்து
இறுக்கும் உன் விரல்களால்
நீ கலைத்துப்போட்ட
என் கூந்தலுக்குள்
சில ரகசிய முத்தங்கள்
தொலைந்து போயிருக்கலாம்…
உன் பிடியில் இருந்து
என்னை விடுவிக்கும்பொழுது
அவற்றை மறக்காமல் எடுத்துக்கொள் !
முடிந்தால்…
என் உதடுகளுக்கு
கொடுத்துச் செல் !
கோபங்கள், தாபங்கள் சுமந்து,
விலகி நிற்கும் தருணம்,
மென்மையான உன் அணைப்பில்,
முனுக்கென்று வரவழைக்கும்,
ஒரு துளி கண்ணீர் கரைத்துவிடும்.
உன் அணைப்பில் கிடக்கும் சில மணித்துளிகள் நான் பெற்ற வரம்,
இத்தோடு வாழ்க்கைப் போதும் என்ற நினைப்பை தரும் அந்த நொடிகள்,
தடையின்றி என் நாட்களை இழுத்து செல்லும் விந்தை..!