காத்திருக்கின்றேன் நினைவுகளோடு!
விழித்திருக்கின்றேன் கனவுகளோடு!
கரைந்து போகிறேன் உன் மறுப்புகளோடு!
செத்தே போய்விட்டேன் உன்
செருக்குகளிடையே சருகாய்!
நீ நம்ப வாய்ப்பில்லைத்தான்
என் மரணச்செய்தி!
ஏனென்றால் உன்னைப்பொறுத்த வரை
நானிறந்து பலகாலம்!