ஐயோ
உன் நினைவுகள்
என்ன
வவ்வால்களா ….
இரவுகளானால்
விளித்துக்கொள்கிறன..!!
உணவுக்கு முன்
அமர்ந்திருக்கின்றேன்….
பசியில்லை…..
இதயத்தில் பசிதீர்க்கும் உணவாக
அவளின் நினைவுகள்…..
இழுத்து பிடித்து
எத்தனை முறை
சொன்னாலும் கேளாமல்….
சுழலுகிறது மனம்
வராமல் போன
காலங்களை
சுற்றி…
நீ என்னில் இருந்த இடம்
இன்று வெற்றிடமாய்…
தொலைந்தது என் கனவுகள் மட்டுமே….
நினைவுகள் அல்ல… அவை
இன்னும் உயிரோடு உறவாடி
கொண்டு தான் இருக்கிறது…
நீ பேசிய என் உறக்கமில்லா இரவுகள்
இன்று ஊமையாய் ஓர் இருட்டறையில்….
ஒரு மாதம் எனைப் பார்க்க முடியாது
என்ற காரணத்தால்
எனைப் பிரிய மனமின்றி
உன்னோடு என் இதயத்தையும்
கொண்டு செல்கிறாய்..!
நானோ உன் நினைவுகளை
சுமந்தபடி நாட்களுடன்
சண்டையிட்டுக் கொண்டிருக்கிறேன்..!
அந்நாட்களை வென்று விட்டால்
நீ என்னருகே வரும் நாள்
வந்து விடும் என்பதற்காக..!
உனக்கு பதிலாக உன்
நினைவுகள் என்னை வாட்டி
வதைகிறதே!!! உன்னை
காதலிப்பது அவ்வளவு பெரிய
குற்றமா!!!!!!!!
விடைபெறும் தருணங்களில்…
உன்னிடத்தில் சொல்லிவிட்டு
செல்கிறேன்… – ஆனால்..
என்னுடன்
வர மறுக்கிறது
என் மனது…
உன் நினைவுகளே துணையாய்
விடைபெறுகிறேனடா….
பிரிந்திருக்கும் நினைவுகள்
நோவாகிறது
சேர்ந்திருக்கும் நினைவுகள்
மருந்தாகிறது
பிரிந்திருக்கும் நேரம் அதிகமென்பதால்
மருந்தாகவேனும் என்னோடிருப்பாயா?
எத்தனையோ வருடங்களுக்கு
முன் நடந்த நம் சந்திப்பு
சில நிமிடங்களுக்கு
முன் நடந்தது போல
இன்னும் என்
நினைவில் உள்ளது .
பசுமரத்து ஆணியாகப்
பதிந்தது .
மரணத்துக்கு பின்
ஆத்மா
தன்னை
மறப்பது நிச்சயம்!
அதுவரை
உன்னை நினைந்திருப்பேன்
இது
சத்தியம்!
எதிரில் இல்லை…
எண்பது வயதிலும்
வலிக்கச் செய்கிறது….
காதலியின் நினைவுகள்….
உன் நினைவுகளுடன்
வெகு தூரம் சென்றாலும்
வின் மீன் மறைவதில்லை.
விழி மூடி உறங்கினாலும்
பிரிவதில்லை.
என்றும் உன் நினைவுகளுடன்…
எப்பொழுதும் உன்னை
நினைத்திருப்பேன்….
ஒருகணம்
மறந்திருப்பின்..
அப்பொழுது நான் …
இறந்திருப்பேன்………….!!!!
பார்வையாளர் நாள்.
குளித்துக் கொண்டிருந்த நீ
வருகிற வரை
எனக்குத் துணையாய் இருந்த
உன் விடுதி
அணிலுக்கு
இப்போதும்
ஞாபகம் இருக்குமா
என்னை
நான் என்னை மறக்கும்
தனிமையில் உந்தன் நினைவுகள்
என்னில் அலைமோதும்..
தாடையில் கை வைத்து உனக்கு பிடித்த
பாடலை
நீ முனுமுனுக்கும் அழகை நான்
கண்டு ரசித்திருக்கிறேன் …!
இன்று அது நினைவிற்கு வருகிறது ..
அதே பாடலை கேட்டு என் தாடையில் நான்
கை வைத்து அமர்திருக்கிறேன் ..
நீ இன்றி உன் நினைவுகள் மட்டும்
எனக்கு சொந்தமாய் …!!!
அசையாத காற்று…!
அலை இல்லாத கடல் ….!
ஓடாத நதி…!
பூக்காத மலர்…!
இருக்கும் என்றால்
” நானும் இருப்பேன் “….!
” உன்னை நினைக்காமல் “…..!
நினைவுகள் எங்கு இருத்தாலும்..
எண்ணங்கள் எங்கு அலைந்தாலும்.
ஒவ்வொரு
நொடியும்
உன் நினைவு தான்…
அழகான நினைவுகள்
அனைத்தும்
ஆழமான வலிக்கு
வித்தாகும்….
மேகங்கள் ஒன்றுக்குள்
ஒன்று மறையும் போது
உன்னுள் என்னைப் புதைத்த
நினைவுகள் நிழலோடியது
என் கண்களில்…!!