உன்னால் மட்டும் எப்படி முடிகிறது ?
கல்லறையிலும் சிரிக்கிறாய்!
கடவுள் கருவறையிலும் சிரிக்கிறாய்!
பல்லாக்கிலும் சிரித்துகொண்டே செல்கிறாய் !
பாடையிலும் சிரித்துக்கொண்டே செல்கிறாய்!
உன்னை பறிக்கும் போதும் சிரிக்கிறாய் !
உன்னை பிறர் மிதிக்கும்போதும் சிரிக்கிறாய்!
நான் கண்டதில்லை உன் கண்ணீரை !
ஏன் உன் இதயம் என்ன கல்லா?