ஒரு நிறுவனத்தின் மேனேஜராக கவுண்டமணியும் உதவியாளராக செந்திலும்:
கவுண்டமணி (டென்ஷனுடன்): வாடா. உன்னைத்தான்டா எதிர்பார்த்து கிட்டு இருக்கேன்...
செந்தில்: குட்டு மார்னிங் சார்..
நீங்க சொன்னபடியே பேப்பர்ல விளம்பரம் கொடுத்திட்டேன் சார்..
கவுண்டமணி: யாரு.. நீ..
நான் சொன்ன மாதிரி..
அப்படியே விளம்பரம் கொடுத்திருக்க...
செந்தில்: ஆமாங்க சார்..
இந்தா பாருங்க..
பேப்பர்ல பெருசா வந்திருக்கே...
கவுண்டமணி: பன்னாடை தலையா..
அந்த வியாக்யானமெல்லாம் எங்களுக்கும் தெரியும்டா..
உனக்கு ஏன்டா எம் மேல இந்த கொலவெறி?
செந்தில்: சார்..எதுக்கு தேவையில்லாம கோவப்படுறீங்க..
நீங்க சொன்னதை செஞ்சது தப்பா?
கவுண்டமணி: டேய்..
ஆத்திரத்தை கிளப்பாத..
நான் உன்கிட்ட என்ன சொன்னேன்..
செந்தில்: வீட்டு நாயைக் காணோம்னு சொல்லி விளம்பரம் கொடுக்க சொன்னீங்க..
கவுண்டமணி: நான் சொன்னபடிதான் விளம்பரம் கொடுத்தியா..
செந்தில்: ஆமாங்க.. சார்...
கவுண்டமணி: நான் மேனேஜரின் நாயை காணோம்னுதான விளம்பரம் கொடுக்க சொன்னேன்
செந்தில்: ஆமாங்க சார்..
கவுண்டமணி: அப்படித்தானே விளம்பரத்துக்கு எழுதிக் கொடுத்த?
செந்தில்: ஆமாங்க சார்..
கவுண்டமணி: அந்த பேப்பர்ல வந்திருக்கிற விளம்பரத்தை எடுத்துப் படிடா
செந்தில்: ஒரு முக்கிய அறிவிப்பு....
எங்கள் நிறுவன மேனேஜர் நாயைக் காணவில்லை....
கவுண்டமணி: இன்னொருவாட்டி நல்லா சத்தமா படிடா
செந்தில்: மேனேஜர்......
நாயை....
சார்.. அதுவந்து....
சின்ன எழுத்துப் பிழைதானே...
கவுண்டமணி: அடேய்..
செய்யறதையெல்லாம் செஞ்சுட்டு..
சின்ன எழுத்துப் பிழையா..
(அப்புறம் என்ன கவுண்டர் பாணியில் தாளிப்புதான்)