நினைவுகள் அவளுடையது,
நியாயம் அவளுடையது,
நச்சரிப்பு அவளுடையது,
புன்சிரிப்பும் அவளுடையது,
அகங்காரம் அவளுடையது,
அழகும் அவளுடையது,
எண்ணம் அவளுடையது,
ஏமாற்றம் மட்டுமே என்னுடையது..!
உயிருடன் கலந்த ஒன்றை
என் உணர்வுக்குள் தேக்கி, என் நினைவுக்குள் வைத்து,
என் விழிகள் தரும் கண்ணீர் துளிகளால் வெளியேற்ற,
என் மனம் தனிமை கொண்டது..!
சில காயங்கள், ஆறாதிருப்பதே நல்லது
மீண்டும் காயங்களை ஏற்படுத்திக்கொள்ளாதிருக்க..!
உன்னை நீங்கிய நாளிலிருந்து நான் தூங்கி பல நாளானது,
உன்னால் வந்த ஏமாற்றம், என் வாழ்வின் தடுமாற்றம்!!.
உன் பார்வைக்காக ஏங்கும் இந்த பாவை,
உன்னை இழந்து விட்டால், எதிர்நோக்கும் சாவை..!
நீ பேசாத நாட்கள் கூட வலிக்கவில்லை,
நீ பேசிய நாட்களின் நினைவுகள்,
நெஞ்சை பிளக்கும் போதுதான் வலிக்கிறது.!!
நான் உன் மீது ஆசை பட்டது தவறல்ல,
ஆனால், உன் விருப்பம் தெரியாமல்,
அதை பேராசை ஆக்கியது தான்,
நான் செய்த தவறு!!.
பேசி பயனில்லாத போது, மெளனம் சிறந்தது.
பேசியே அர்த்தமில்லாத போது, பிரிவே சிறந்தது..!
உன்னை விட்டு விலக நினைப்பவர்களுக்கு பாரமாய் இருப்பதை விட,
அவர்களை பாராமல் இருந்து பார், உன் மதிப்பு அவர்களுக்கு தெரியும்...!