உங்கள் தனித்திறமையை பற்றி அறியாதவர்கள்,
ஏதாவது குறை சொல்லிக்கொண்டு இருந்தால்,
அதை நினைத்து தயவுசெய்து,
கவலைப்பட்டுக்கொண்டு இருக்காதீர்கள்...!
ஒரு மென்மையான வார்த்தை,
ஒரு கனிவான பார்வை,
ஒரு அன்பான புன்னகை,
ஆகியவற்றால் அதிசயங்களையும்,
அற்புதங்களையும் நிகழ்த்திக் காட்ட முடியும்.
புகழ்ந்தால் மயங்காதே,
இகழ்ந்தால் தளராதே,
எதிர்ப்பவரிடம், துணிந்து நில்,
மதிப்பவரிடம், பணிந்துச்செல்!.
நம்மை வெறுப்பதற்க்கும் ஆளுங்க வேணும்
அப்போ தான் நல்லா வாழ்றதுக்கான
வைராக்கியம் இருக்கும்..!
சந்தர்ப்பமும், சூழ்நிலையும்
மட்டுமே மனிதனின் குணத்தை
எடுத்துக்காட்டும் கண்ணாடி..!
மற்றவர்களைப்
பார்த்து பார்த்து
நீ அவர்களைப்
போல் வாழ்ந்தால்
உன்னைப் போல்
யார் வாழ்வது?
ஆகவே நீ,
நீயாகவே இரு...!
உன் எல்லை எதுவென்று,
உன் மனதுக்கு தெரியும் போது,
அடுத்தவர்களின் விமர்சனத்தைபற்றிய,
கவலை உனக்கெதற்கு?.
நம்மளை யாருமே மதிக்கலைனா
நம்ம யாரையும் மதிக்காம போய்கிட்டே இருக்கனும்!.
அதுவே அவங்களுக்கு தண்டனை தான்!!!.
உன்னை வழிநடத்த
அறிவை பயன்படுத்து...!
மற்றவர்களை வழிநடத்த
இதயத்தை பயன்படுத்து...!
எந்நிலையிலும் நீ யாருக்கும் தாழ்ந்தவரில்லை!!
எப்போதும் உன்னை நீ உயர்ந்தயிடத்திலேயே வைத்திரு...!
எந்நிலையிலும்,
நீ யாருக்கும் தாழ்ந்தவரில்லை,
எப்போதும் உன்னை நீ,
உயர்ந்தயிடத்திலேயே வைத்திரு...!
நீ சுயமாகவும், சுதந்திரமாகவும் சிந்தித்ததை,
எல்லோரும் விரும்புகிறார்களா இல்லை,
வெறுக்கிறார்களா என நினைத்து,
ஒரு போதும் கவலைப்பட தேவையில்லை!.
நீ ஒதுக்கப்படும் இடங்களில் நிமிர்ந்து நில்,
நீ புகழப்படும் இடங்களில் அடக்கமாய் நில்!!
நீ விமர்சிக்கப்படும் இடங்களில் மௌனமாய் இரு,
நீ நேசிக்கப்படும் இடங்களில் அன்புடன் இரு!!
உன்னை வலுப்படுத்த தெரிந்தவர்களிடம் மட்டும்,
உங்கள் குறைகளை சொல்லுங்கள்.
உன்னை பின்பற்றி வருபவர்களிடம் மட்டும்,
வழியை சொல்லுங்கள்.
நேசிக்க தெரிந்தவர்களிடம் மட்டும்,
அன்பை சொல்லுங்கள்.
ஓடத்தெரிந்தவர்களிடம் மட்டும்,
தூரத்தை சொல்லுங்கள்.
வாழ்வில் நீ தாழ்ந்தவன் அல்ல,
தலைச்சுமையாய்த் தாழ்வு மனப்பான்மையை,
தாங்கிச் செல்லாதவரை...!
உன்னுள்ளே உள்ளதடா,
உயர்வும், தாழ்வும்...!
உன்னை நீ நேசி!!
பிறரின் நேசிப்புக்கும், வாழ்த்துக்கும்,
ஆறுதலுக்கும் ஏங்கி, உன்னை நீ ஏமாற்றாதே!
உன்னைப்போல் வேறெவராலும்,
உன்னை நேசிக்க இயலாது.!!
கட்டளையிட விரும்புபவன்,
முதலில் பணிவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும்..!
எல்லோரையும் திருப்திப்பட வைக்க நினைப்பவனால்,
வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது..!
Vaalkaiyil Naam Uyarvathum, Thaalvathum!!
Naam Merkollum Anugumurai Ondrile Adankiyirukirathu.!!