கோபம் ஏன் வருகிறது என்பதை புரிந்து கொண்டாலே அதிலிருந்து மீண்டு விடலாம். கோபத்திற்கு காரணம் மனஅழுத்தம். இன்றைய நெருக்கடியான வாழ்க்கைச் சூழலில் யார்தான் மனஅழுத்தம் இல்லாமல் இருக்கிறார்கள்? காலமும், சூழலும் கோபத்திற்கு அடிப்படை காரணமாக அமைகிறது.
எந்திரகதியில் இயங்கும் நமக்கு ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்ய வேண்டி இருக்கிறது. அவற்றை குறித்தநேரத்தில் செய்ய முடியாமல் போகும்போது நமக்குள் மன அழுத்தம் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இதனால், மனதில் வெறுப்பு தோன்றுகிறது. அந்த வெறுப்பே கோபமாக வெளிப்படுகிறது. சந்தோஷத்தைக் கெடுக்கிறது. எனவே கோபத்தை அடக்கி கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது சந்தோஷ வாழ்க்கைக்கான முக்கியத் தேவையாகிறது!