காலங்கள் வினாடிகளை விடவும் வேகமாய் ஓடுகின்றன!
பால்ய காலங்களை கடந்து - இன்று பருவ காலத்திலே நாம்!
ஒரே அறையில் ஒன்றாக பயில்கிறோம் - பின்
நன்றாக துயில்கிறோம், எப்போதும் மகிழ்கிறோம்!!
இருவரும் பிரியும் தருணங்கள் எதிர்காலங்களில் வரலாம்!
சில கண்ணீர்காலங்களை அவை நமக்கு தரலாம்.
அந்த கணங்களில் எல்லாம் என் கண்களின் வழியே வழியும்,
உனக்கும் எனக்குமான செல்ல மோதல்களின் நினைவுகள்.
என்றும் அன்புடன், எப்போதும் என் இதயத்தில் இருப்பீர்கள்.
இனிய ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்.