எல்லோருக்கும்
பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..
தை, புது நம்பிக்கைகளையும்
மகிழ்ச்சியையும்
செழிப்பையும்
பிரசவிக்கட்டும்...
பொங்கலோ பொங்கல்!
இன்றும்
தை பொங்கல் திருநாளில்
உழவு தொழிலுக்கு
உறுதுணையாக இருக்கும்
மாடுகளுக்கும் "மரியாதை'
செய்யும் விழாவாக
"மாட்டு பொங்கல்'
அல்லது
"பட்டி பொங்கல்'
வைக்கப்படுகிறது.
உடலும் மனமும் மகிழ்வில் பொங்கி,
சூரியனுக்கும் பஞ்சபூதங்களுக்கும் இயற்கைக்கும்,
நன்றி சொல்லும் பகுத்தறிவு பெருநாளாம்,
தைத்திங்கள் பெருநாளாம், தமிழர் திருநாளாம், பொங்கல்,
இனிய சுவைமிகு பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
உங்களுக்கும், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்... இதயம் கனிந்த
போகி பண்டிகை,
தை பொங்கல்,
உழவர் திருநாள்,
மாட்டு பொங்கல்,
காணும் பொங்கல்
நல்வாழ்த்துக்கள்
தமிழர்களின் தனிப்பெரும் விழா தைப் பொங்கல்.
உழவுக்கும், உழைப்புக்கும் மரியாதை செலுத்தும்
இந்தத் திருவிழாவில் உங்கள் உறவினர்கள், நண்பர்கள்
என அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை கூறி கொள்கிறேன்!.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கி,
செல்வம் பெருகி, நீடித்த ஆரோக்கியத்துடன்
வாழ இறைவனை வேண்டுகிறேன்...!
தைப்பெண்ணே
வருக வருக
உன் வரவால் ...எம்
மக்கள் மனம்..
மகிழட்டும்..
துவண்டு கிடக்கும்
எம் ...சம்முதாயம்..
துணிந்து எழட்டும்
வாடீக் கிடக்கும்..
வயல் வெளியெங்கும்..
வளங்கள்...பெருகட்டும்....
பொங்கும் மங்களம்
எங்கும் பொழிய
பொங்கலே நீ...
பொங்கி....வழிக.....
நிலாமுற்றத்து உறவுகள் அனைவர்க்கும்
எனது உள்ளம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்
வரப்புகளில் விளையாடி
வயலுக்குள் வாழ்ந்து
வளர்ந்த நெற்கதிர்களை
வெண்மணி அரிசியாக்கி
புத்தம்புதுப் பானையில்
பாலும் சர்க்கரையும்
பாகும் பருப்புமிட்டுப் பொங்கி
மஞ்சளும் இஞ்சியும்
கரும்பும் கற்கண்டும் கூட்டி
நிலத்தை முத்தமிட்டுச்
சூரியனை வாழ்த்தி
உழவர்தம் உயிர் நெகிழும்
பொங்கல்நாள்
பொங்கல் வாழ்த்துக்கள்
புதுப்பொலிவும், பொன்விடியலும்
தந்து நற்பொழுதுபுலரும்
என்ற நம்பிக்கையுடன்
மலர்ந்துள்ள சித்திரை
உலகத் தமிழர்களின்
உள்ளம் எல்லாம் குளிரும் வகையில்
தமிழ் ஈழம் பிறக்கவும்,
தமிழர் தாகம் தணியவும்,
ஈழத்தமிழர் இன்னல் தீரவும்,
தாய்த் தமிழகத்தின் குமுறல் நீங்கவும் வழிவகுக்கட்டும்
அனைத்து தமிழர்களும்
சிறந்து வாழ
தமிழர் திருநாளாம்
விவசாயிகளின் நன்றித் திருநாளான
பொங்கல் நாளில்..
உங்களுக்கு எனது
பொங்கல் வாழ்த்துகள்.
உங்கள் நண்பர்களுக்கும்
உறவினர்களுக்கும்
மகிழ்ச்சியும்
அன்பும் மற்றும் எல்லா வளங்களும்
பொங்கல் போல் என்றும் பொங்கட்டும்.
பொங்கும் பொங்கலைப்போல்
அனைவரது மனதிலும்,
வீட்டிலும், நாட்டிலும்
இன்பங்கள் பொங்க வேண்டும்.
அளவற்ற செல்வங்கள் வந்து
அரவணைக்க வேண்டும்.
தமிழர் தினமான தை
”தை” தமிழர் வாழ்வில் வளத்தை சேர்க்கட்டும்.
தை பிறந்தால் வளி பிறக்கும்
தைத்திங்களில் பொங்கல் பொங்கி
எத்திக்கிலும் மங்கலம் பெருக
மங்களகரமான இந்நாளை-மனதினில்
நினைவு கூர்ந்து கவிதை தந்த தமிழுக்கு
வாழ்த்துக்களும்
பொங்கல் வாழ்த்துக்களும் கூறி
தமிழ் புத்தாண்டை கொண்டாடுவோம்...
பூமித் தாயே பெருமிதம்கொள்
ஆயிரம் விதைதான் விதைத்தோம்
ஆனால் நீயோ ஆயிரம்பேர்
உண்ண உணவு கொடுக்கிறாய் .
எங்கள் அறிவியல் உலகம்கூட
இன்னும் இந்த விந்தையின்
வியப்பிலிருந்து மீளாமல்தான் உள்ளது .!
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
அன்புடையீர்!
குன்றா நலமும்
குறையா வளமும்
மங்கா புகழும்
மாசிலா செல்வமும்
அன்புடை சுற்றமும்
அறமறிந்த நட்பும்
பொங்கலோடு பொங்கி
பொங்கியது தங்கி
தங்கியது பெருகி
பெருகியது உதவி
உதவியது உவகை பெருக்கி
பெருகிய உவகை பொங்கி
பொங்கியது நிலைத்து
நீடூழி வாழ இறை வணங்கி
வாழ்த்துகிறோம் !
பொங்கல் நல் வாழ்த்துக்கள்!:
தித்திக்கும் தமிழ் போல,
பொங்கட்டும் பொங்கலது!!!
புதுப்பானையில் இட்ட பொங்கல் போல,
திகழட்டும் தேசமது!!!
திகட்டாத கரும்பு போல,
இனிக்கட்டும் மனிதனின் மனது!!!
நெய்யில் வறுத்த முந்திரி போல,
வாசம் பெருகட்டும் பூமியெங்கும்!!!
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!.🙏
வெயில், குளிரில் பாடுபட்டு
கொண்டுவந்த குண்டுநெல்ல
பக்குவமா குத்தியெடுத்து,
புதுப்பானை அடுப்போட,
மஞ்சள், கரும்பு துணையோட,
புத்தாடை அணிந்து மகிழ்ந்து
சொந்தபந்தம் இணைந்து,
சூரியனுக்கு வணக்கமிட்டு
பொங்கிவரும் பொங்கலைக்கண்டு
பொங்கலோ பொங்கலென்று!!!
என கொண்டாடிடும் பொங்கல்,
தித்திக்கும் தை பொங்கல்..!
அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்.
பழையன கழிதலும்
புதியன புகுதலும் நலமேயாம்
வாழையடி வாழையாய் வந்த
நல்லதோர் முதுமொழியாம்
தைமாதமதில் தைதிருநாள் பொங்கலதில்
விடியும் வேளை நாமெழுந்து நீராடி
நற்காலைப் பொழுதினிலே
பொங்கல் விழா தனிப்பெருந்
திருவிழாக்கோலம் பூணுகிறது.
தைப்பொங்கல் திருவிழா என்பது
ஒரு சமய விழா அல்ல!
தமிழரின் பண்பாட்டு விழா!
தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு
கொண்டாடும் நாள்!
அனைவருக்கும் இனிய
பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
தமிழர் திருநாள் இது
தமிழர்களின் வாழ்வை
வளமாக்கும் திருநாள்...
உழைக்கும் உழவர்களின்
களைப்பை போக்கி
களிப்பில் ஆழ்த்தும்
உற்சாக படுத்தும் திருநாள்...
உறங்கும் பெண்களை
அதிகாலையிலே எழுந்து
கோலம் போடவைக்கும்
கோலாகலமான திருநாள்...
மிரட்டி வரும் காளைகளை
விரட்டி அடக்கும் வீர திருநாள்...
பழைய எண்ணக்களை அவிழ்த்து
புதிய சிந்தனைகளை புகுத்தும்
புதுமையான திருநாள்...
என் உடன்பிறவா தமிழ் மக்கள்
அனைவருக்கும் என்
உற்சாகமான பொங்கல்
நல்வாழ்த்துக்கள்...
பட்டுப் புதுச்சோறு
பொங்கிவரும் பொங்கலிது
கரும்பைக் கைபிடிக்க
கட்டழகைக் கண்பிடிக்க
குறும்பைச் சொல்பிடிக்க
குமரியிதழ் தேன்வடிக்க
வயலில் வாய்க்காலில்
ஒய்யார நடைநடந்து
பயலும் பொண்ணுகளும்
பாடிவரும் பொங்கலிது
அன்னம் கொடுப்பவளின்
அருமைகளை எண்ணிமனம்
நன்றிப் பெருக்கோடு
நிலம்வணங்கும் பொங்கலிது
பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்
பொங்கலோ பொங்கல்
இந்த இன்ப கூச்சல்
தைப்பொங்கலில் மட்டுமல்ல
சிறு வயதில்
ஒவ்வொரு முறையும்
மதிய உணவுக்கு அம்மா
சோற்றை பொங்க வைப்பதை
பார்த்த போதெல்லாம்
நான் துதித்தது
இந்த தாரக மந்திரத்தையே.