எத்தனை... எத்தனை...
மகா சிவராத்திரி நாளில்!
* மகா பிரளயத்தில் உலகம் அழிய... மீண்டும் உலகைப் படைக்க வேண்டி, உமையவள் சிவனாரை நோக்கி கடுந்தவமிருந்தது இந்தத் திருநாளில்தான்!
* ஈசன், லிங்கத்தில் பிரசன்னமானது இந்த நாளில்!
* அடி- முடி தேடிய விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் சிவனார் காட்சி தந்த நன்னாளும் இதுவே!
* பாற்கடலில் கடையும்போது வெளியான விஷத்தை சிவபெருமான் சாப்பிட... அதை விழுங்காதபடி தடுத்தார் உமையவள். இதனால், ஈசனுக்கு நஞ்சுண்டன், நீலகண்டன் எனும் திருநாமங்களைப் பெற்றார். அந்த நாளும் மகாசிவராத்திரிதான்!
* அர்ஜுனன் தவம் இருந்து பாசுபதம் எனும் அஸ்திரத்தைப் பெற்றது இந்த நாளில்!
* பகீரதன் ஒற்றைக் காலில் தவம் இருந்து கங்கையை பூமிக்கு வரவழைத்த நாள்!
* திருக்கடையூர் திருத்தலத்தில்... மார்க்கண்டேயனுக்காக, எமதர்மனை சிவனார் சம்ஹரித்த அற்புதமான நாளும் இதுவே!
* கண்ணப்ப நாயனாரின் கதை தெரியும்தானே. சிவனாருக்காக, தன் கண்ணையே பெயர்த்தெடுத்துத் தந்தாரே... அது இந்த நாளில்தான்!
* ஸ்ரீபார்வதிதேவி தவமிருந்து வழிபட்டு சிவனில் பாதியைப் பெற்ற புனித நாளும் மகா சிவராத்திரியில்தான்!
- இப்படி, புண்ணியம் மிகுந்த நிகழ்ச்சிகள் பல நடந்தது இந்த சிவராத்திரியில்தான் எனக் கூறப்படுகிறது.