ஒருவன் நிறைந்தவன், இன்னொருவன் குறைந்தவன்,
நட்பில் எப்போதும் இல்லை பேதம்,
ஒருமையில் அழைப்பதை உயர்வாய் நினைக்கும்,
இடர் துடைப்பதை தனது உயிராய் மதிக்கும் - நண்பன்.
அன்பில் மகிழும், கவலையில் மனம் வெம்பி நெகிழும்.
என்றும், எப்போதும் விலகாது தோளோடு தோளாய் நிற்கும் - நட்பு.
நட்பிற்கு இணையாக நானிலத்தில் வேறேதும் உண்டோ!