Dreams R only Thoughts…
U didn’t have Time To Think
About during The Day.Sweet Dreams.
Dreams won't come looking for you. That's why you have to chase them. Pursue them until they become reality, then hold on tightly!.
கலைகிற கனவுகள்
எனக்குப் பிடிப்பதில்லை…
இப்போதும் சரி
என் கனவு கலையவில்லை…
கனவு காண்கையிலேயே நிகழ்ந்துவிட்டது.. .
எனக்கு மரணம்!
அழியாத அன்புடன்,
பஞ்சு மெத்தையில்-
நிம்மதியாக தூங்கும் உனக்கு;
என்னை பற்றிய…..
கனவு வருவதே இல்லை.
ஆனால்;
உன்னை பார்த்த-
நாள் முதல்;
தூக்கத்தை இழந்த நான்…..
கனவே கதி என்று கிடக்கிறேன்!
கனவு…
உறங்கும் நேரத்தில்
உன்னை மறப்பேனோ
என்ற அச்சத்தில்
உறங்கச்சென்றேன்…
உறக்கம் வந்தவுடன்
உன்னை காணும்
வரம் தந்தன
என் கனவுகள்…
தொடாமல் தூரத்தில் தொலைத்த சொர்க்கத்தை
என் தூக்கத்தில் நான் தொட்டேன் …கனவுகள்
பலூன் கேட்டு
அழுத சிறுமி
அப்படியே உறங்கிப் போனாள்!
சிறிது நேரத்திற்கெல்லாம்
அழுதபடி தூங்கியவளின்
முகமெல்லாம் புன்னகை
எத்தனை பலூன்கள்
வந்ததோ அவள் கனவில்!
நிலவே நீ இரவில்
வருவதால்தானோ என்னவோ
என் கனவுகளும்
இரவிலே வருகின்றன…
நீ ஒரு முறையாவது
பகலில் வந்துவிட்டுபோ
அப்போதாவது என்கனவுகள்
வெளிச்சத்திற்கு வரட்டும்…
உறங்கப் போவதற்கு முன்னால்
நீ என்னை
ஒரு முறையாவது
நினைத்துவிட்டுப் போ.
அப்போதாவது
உன் கனவில்
நான் வந்ததாக ஒரு
சரித்திரம் இருக்கட்டும்..!
சிறகின் துடுப்பிசைத்து
எதிர் வரும் வண்டை
நான்
கண்டு கொண்டிருப்பது
எந்தப் பூவின் கனவோ
கனவில் கூட
என்னைக்
கிள்ளிப் பார்க்கும்
இந்தச் சுரப்பிகள்
உன்னைக்
கண்டதும் எப்படி
இவ்வளவு
இயல்பாய்
தூங்கிவிடுகின்றன
♥ ♥ கண்ணில் காணாத காட்சிகளை எல்லாம் கனவுகளுக்கு தாரை வார்த்து விட்டு…
நேரில் காண்பதை நெஞ்சில் நிலை நிறுத்த போராடினாலும் ….
இறுதியில் ஜெயிப்பது என்னவோ கனவுகள் தான் ♥ ♥
வழக்கமான இரவென்றாலும்,
வழக்கமான ஆசைகளோடு,
இன்றும் போர்வைக்குள் பதுங்கினேன்.
என்னை நனவில் காதலிக்காத நீ,
கனவிலாவது காதலிக்க வருவாய்
என்ற ஆசையுடன் கண்களை மூடி
நினைத்தேன் வந்தாய்.
” கனவுகளை காதல் செய்தேன்
கண்களை மூடி -
கண்மூடித்தனமாய் … !
விழித்து பின் பார்க்கையில்
விடியல் ஏனோ தூரத்தில்,
அவளோடு சேர்ந்து … ! ”
— கனவுகளுடன்…
நீ என்னிடம்
கனவிலாவது பேசுவாய் என்றுறங்கினால்
கனவு கூட கனவாகியே போனது
நான் துாங்கி பல நாட்கள் ஆகி விட்டது!
- காரணம்
அவள் சொன்ன வார்த்தை!
“கனவிலும் என்னை நினைக்காதே” !
- என்று ….!
கனவு கூட கனவாகியே போனது.
பட்டாம்பூச்சி துரத்திய
குழந்தையின் குதூகலத்துடன்
விடிகிற
கனவில் உனைக் கண்ட
என் இரவு!
அவள் சிரிக்கிறாள் என் கனவில்…
ஆனால் நான் கனவு காண்பதே அவள் சிரிப்பதற்காக தான்..
अगर प्यार में पैसे की अहमियत
नहीं होती तो हर कहानी में
लड़की के ख्वाबों में कोई राजकुमार
ही क्यों होता है?
कभी सुना है कि "मेरे सपनों का मोची,
बारात ले कर आएगा" ???