ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காத காரணத்தால் அங்கு நம் நடிகர்கள் மாவாட்ட விடப்படுகின்றார்கள் அப்போ அவர்கள் பேசற டயலாக்ஸ்...
தனுஷ் : வெண்மேகம் அரிசியாக உருவானதோ இந்நேரம் அதைப்போட்டு மாவரைப்பதோ உன்னாலே பல தோசைதான் உருவாகுதே...
விஜய் : எவ்ளோவோ பண்றோம் இதப்பண்ணமாட்டோமாங்ண்ணா? வாழ்க்கை இந்த ஆட்டுரல் மாதிரியே வட்டம்ங்ண்ணா இன்னிக்கு தியேட்டர்ல மாவாட்டுறவன் நாளைக்கு ஹோட்டல்ல மாவாட்டலாம் இன்னிக்கு ஹோட்டல்ல மாவாட்டறவன் நாளைக்கு தியேட்டர்ல மாவாட்டலாம்...
விஜய காந்த் : இந்த குண்டால மொத்தம் 23000 அரிசி இருக்கு , அந்த குண்டால 2.5 லிட்டர் தண்ணியிருக்கு அதுக்கடுத்த குண்டால 12333 உளுந்து இருக்கு இதை அரைக்கணும்னா மொத்தம் 2 மணி 45 நிமிஷம் 32 விநாடி ஆகும் பரவாயில்லியா?
தனுஷ் : என்னை எவ்வளவு கெட்டவனு சொல்றிங்கலோ நான் அவ்வளவு நல்லவன். என்னை எவ்வளவு நல்லவன்னு சொல்றிங்கலோ நான் அவ்வளவு கெட்டவன்.
சந்தானம் : டேய் ! தூசு துரும்புல என்னடா நல்லது, கெட்டது…
அரபு தொலைக்காட்சி ஒன்றில் ஒசாமா பின் லேடன் நேற்று அனுப்பிய காசட் ஒன்று ஒளிபரப்பானது. அதில், பின் லேடன் கூறியிருப்பது: நாங்கள் தீவிரவாதிகள்தான், ஆனால் எங்கள் தீவிரவாதத்திற்கு ஓர் எல்லை உண்டு. நிச்சயமாக சுறா பட ரிலீசுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
திருட்டு வீ.சி.டி.-வியாபாரிகல்லாம் சேர்ந்து அந்த நடிகர் வீட்டு முன்னாடி உண்ணாவிரதம் இருக்காங்களே...எதுக்கு?
அதுவா அந்த நடிகர் நடிச்ச படத்த திருட்டு வீ.சி.டி-யா நிறைய காப்பி போட்டிருந்தாங்களாம். விக்காம நட்டம் வந்துடுச்சாம்..அதான் நடிகர்ட்ட நஷ்டஈடு கேட்டு உண்ணாவிரதம் இருக்காங்க...
கின்னஸ் புக்கில் தான் தான் இன்னும் மிக பெரிய காமெடியனா என பார்க்க போன சர்தார் திரும்பி வரும் போது ஆவேசமாக,
“யார் அந்த குருவி விஜய்”
சிம்பு : ஆட்டுவேன் ஆட்டுவேன் அரிசி மாவு ஆட்டுவேன் பாரு , கலக்குவேன் கலக்குவேன் அதில உளுந்த மாவையும் கலக்குவேன் பாரு கலந்த பின்னெ நீயும் தோசையத்தான் சுட்டுத்தான் பாரு..
தமிழ் நாட்டில மொத்தம் 3 கடல் , 45 ஆறு, 239 ஏறி, 1836 குளம், 3200 வாய்கள், 21340கிணறு ..
இத்தனை இருந்தும் ஏன்டா என்னோட படத்த பாத்து சாவுரிங்க ???
சூர்யா : என்னால முடியும் , சட்னிக்கும் மாவுக்கும் நூலளவுதான் வித்யாசம் பொரிகடலையும் தேங்காயும் போட்டு ஆட்டுனா அது சட்னி, அரிசியும் உளுந்தும் போட்டு ஆட்டுனா அது இட்லி மாவு.ஒன் மோர் திங்க் கஷ்டப்பட்டு மாவாட்டுனா மாவரைக்க முடியாது இஷ்டப்பட்டு மாவாட்டுனாத்தான் மாவரைக்க முடியும்...
கமல் : எங்காத்தா குழம்பு வைக்க கத்துக்குடுத்தா, சோறாக்க கத்துகுடுத்தா, இட்லி சுடக்கத்துக்குடுத்தா ஆனா மாவாட்ட கத்துக்குடுக்கலியே...
சுறா படம் வெளியாவதை முன்னிட்டு தமிழக அரசு அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
“சுறா படத்தை யாரும் ஒரு முறைக்கு மேல் பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படிப் பார்த்தால் நேரும் விபரீதங்களுக்கு அரசு பொறுப்பல்ல..!! முதல் முறை பார்ப்பவர்களுக்கு மட்டுமே கலைஞர் காப்பீட்டுத் திட்டம் பொறுப்பேற்கும்.”
டாக்டர்1: என்ன ஆச்சு! கேஸ் பெயிலியரா?
டாக்டர்2: ஆமா, தற்கொலை முயற்சி. விஷமா இருந்தாக்கூட காப்பாத்தியிருக்கலாம். பையன் விவரமா, ‘விஜய்’படத்தை முழுக்க பார்த்திருக்கான்!
விஜய் – நான் நம்ப பையனை சுறா படத்துக்கு கூட்டிட்டுப் போகப் போரேன்.
சங்கீதா – அப்பனாயா நீ, பெத்த புள்ளையையே கொல்ல பார்க்கறியே
விஜய் –????????
ரசிகர்- தலைவா !உன் படம் ஒன்னு விடாம நான் திருட்டு விசிடியில பார்த்திருக்கேன்
விஜய் – அண்ணா ! தியேட்டருல்ல போயி படம் பார்த்தே இல்லையிங்களாண்ணா
ரசிகர் – போ, தலைவா ! தனியா பார்க்க் பயமா இருக்குதில்ல
ரசிகர் : ஹலோ பெப்சி உமாவா?எனக்கு சுறா படத்துல இருந்து ஏதாவது பாட்டு போடுங்க…..
உமா : கொஞ்சம் பொறுங்க இன்னும் ரெண்டு நாள்ல படத்தையே போடுறோம்…
நிருபர்: Sura படம் முடிஞ்சதும் என்ன பண்ணுவீங்க?
விஜய்: ரொம்ப சிம்பிள்! பக்கத்திலே இருக்கிற சர்ச்சுக்குப் போய் பாவ மன்னிப்பு கேட்பேன்!!
அஜீத் : சரித்திரத்தை ஒரு நிமிஷம் திருப்பி பாருங்க அது நமக்கு கத்து கொடுத்தது ஒண்ணே ஒண்ணுதான் காசில்லாம நாம சாப்பிடணும்னா எங்க வேணும்னாலும் எந்த ஹோட்டல்ல வேணும்னாலும் மாவாட்டலாம் கேன் கேன்...ஐ ஆம் பேக்...
விஜய் – ஒரு தடவ முடிவெடுத்துட்டேன்னா என் பேச்ச நானே கேட்க மாட்டேன்
ஒருவர் – உங்க பொண்டாட்டி……….
விஜய் – நானே கேட்க மாட்டேன்னு சொல்லறேன்
எம் பொண்டாட்டி எப்படியா கேப்பா (அழுகிறார்)
நாட்டாமை: என்ரா… பசுபதி…எக்ஸாம்க்கு பெவிகால் எடுத்துட்டுப்போற ?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப்போச்சாம்..
நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா….. சிங்கம்டா..